தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா அக்கரைவட்டம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகே இருந்த பஸ்நிறுத்தம் பழுதடைந்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை புதிய பஸ் நிறுத்தம் கட்டவில்லை, பொது மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.பள்ளி, கல்லூரி செல்வோர், வேலைக்கு செல்வோர் வெயிலிலும் மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது, எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவோணம், பொதுமக்கள்