பயணிகளுக்கு நிழற்கூடம் அவசியம்

Update: 2026-05-31 13:43 GMT

ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கும் அரசு கல்லூரி செயல்படுகிறது. மேலும் ஆண்டகளூர் கேட் முக்கிய சந்திப்பாகும். இங்கிருந்து தான் சுமார் 20 கிலோ மீட்டர் வரை உள்ள பல்வேறு இடங்களில் இருந்து தென் மாநிலங்களுக்கும், சேலம், பெங்களூரு போன்ற இடங்களுக்கும் பஸ் பயணிகள் இரவு, பகல் பாராமல் பஸ்சுக்காக காத்து நிற்பார்கள். தற்போது கோடை வெயில் அடிக்கிறது. மாணவ, மாணவிகள் பொதுமக்கள், பயணிகள் நிழற்கூடம் இல்லாததால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசியம் பயணிகளுக்கு நிழற்கூடம் அமைக்கலாமே!

மேலும் செய்திகள்

பஸ் வசதி