நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-05-24 14:22 GMT

மோகனூர் தாலுகாவில் என்.புதுப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கிராம பஞ்சாயத்து அலுவலகம் எதிரே, லத்துவாடி ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ்களில் ஏறி நாமக்கல்லுக்கு சென்று வருகிறார்கள். ஆனால், பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மழை, வெயில் காலங்களில் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் லத்துவாடி ரோடு சந்திப்பு பகுதியில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்