ராமநாதபுரம் கோட்டைவாசல் விநாயகர் கோவில் அருகில் உள்ள பவுண்டு கடைதெரு பகுதியில் வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் நிறத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி வழியே பயணிக்கும் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.