போக்குவரத்து நெரிசல்

Update: 2026-05-17 16:01 GMT

போடி செல்லும் பஸ்கள், உத்தமபாளையம் கிளை கருவூல அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிடாமல் பைபாஸ் சாலையில் இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், பயணிகளும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்திச்செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்