வில்லியனூர் - விழுப்புரம் மெயின் ரோட்டில் மூலக்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் அரசு, தனியார் பஸ்கள் சாலையின் நடுவிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விடுகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். நடு ரோட்டில் பஸ்கள் நிறுத்தப்படுவதை தடுக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.