கோவை மாநகரில் இருந்து சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் சில தனியார் பஸ்களில் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை விட கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் மீது சம்ந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.