மந்தாரக்குப்பம் ஜெயப்பிரியா பஸ்நிறுத்தம் பகுதியில் உள்ள கடைகளுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையிலேயே தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள், பாதசாரிகள் கடும் அவதியடைகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.