பயணிகள் சிரமம்

Update: 2026-05-10 14:25 GMT

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் சேலம் பைபாஸ் சாலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடம் பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது. இதில் இரவு நேரங்களில் விளக்குகள் எரிவதில்லை. மேலும் நிழற்கூடத்தின் அருகே பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பயணிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்கவும், பஸ்கள் நின்று செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்