ஊருக்குள் வராத அரசு பஸ்கள்

Update: 2026-05-03 15:43 GMT

குமுளி, கம்பம் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, கோவைக்கு செல்லும் அரசு பஸ்களில் சில உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய ஊர்களுக்குள் வராமல் பைபாஸ் சாலையில் சென்றுவிடுகின்றன. இதனால் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே திருச்சி, கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களும் உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய ஊர்கள் வழியாக செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்