பயணிகள் அவதி

Update: 2026-04-26 13:25 GMT

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த புட்லூர் ரெயில் நிலையம் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்க மிகவும் தாமதமாகிறது. சில சமயங்களில் 'டிக்கெட் கவுண்டர்' செயல்படாமல் மூடியிருக்கிறது. இதனால் இங்கு வரும் பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாமதிக்காமல் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்