நடவடிக்கை தேவை

Update: 2026-03-08 09:26 GMT

அஞ்சுகிராமம் பஸ்நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் அடிக்கடி கொண்டுவந்து நிறுத்தப்படுகின்றன. அவை பயணிகள் அமர்வதற்காக போடப்பட்டுள்ள இருக்கைகள் அருகில் நிறுத்தப்படுவதால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள், முதியோர்கள், பெண்கள், மாணவர்கள் அமர முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பஸ்கள் வருவதும், செல்வதும் சரியாக தெரிவதில்லை. இதனால், பயணிகள் பஸ் தவறவிடும் நிலை ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பஸ் நிலையத்தில் பேரூராட்சி வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, கன்னியாகுமரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி