பொதுமக்கள் சிரமம்

Update: 2026-02-22 09:41 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியம் பொட்டகவயல் கிராமத்தில் இருந்து பிற சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதிகள் இல்லை. மேலும் தற்போது இயங்கும் பஸ்களும் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சிரமமடைகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த கிராமத்திற்கு கூடுதல் பஸ் இயக்கவும், சரியான நேரத்தில் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி