அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள புறவழி சாலை நான்கு வழி சந்திப்பு ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து சிக்னல் பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் சிமெண்டு தொழிற்சாலை டிப்பர் லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தாறுமாறாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சிக்னலை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.