அம்பை புதிய அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல அம்பை பஸ் நிலையத்தில் இருந்து சரிவர பஸ் வசதி இல்லை. இதனால் அங்கு சிகிச்சையில் இருப்பவர்களும், சிகிச்சைக்கு செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே அம்பை பஸ் நிலையத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு காலை முதல் இரவு வரை பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.