ஈரோட்டில் இருந்து ஆர்.என்.புதூர், மாதேஸ்வரன் நகர் வழியாக சித்தோடு, பவானிக்கு காலை, மாலை வேளைகளில் அரசு பஸ் இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் மாலை நேரத்தில் இயக்கப்படவில்லை. இதனால் ஆர்.என்.புதூர், மாதேஸ்வரன் நகர் பகுதிகளில் இருந்து ஈரோட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள் கடும் இன்னலுக்குள்ளாகின்றனர். மாலை நேரத்திலும் பஸ் இயக்க அதிகாரிகள் முன்வருவார்களா?