சேலம் கிச்சிப்பாளையம் அறிஞர் அண்ணா தெருவுக்கு செல்லும் வகையில் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இந்த பலகை சேதமடைந்து தற்போது வீட்டுச்சுவரில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு புதிதாக வருவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த பெயர் பலகையை சீரமைக்க வேண்டும்.