பஸ்சின் நேரம் மாற்றப்படுமா?

Update: 2026-01-25 12:28 GMT


ஒரத்தநாட்டுக்கு அருகில் உள்ள கக்கரைக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு, கோட்டைத்தெரு, செல்லம்பட்டி, சாமிபட்டி, காராமணித்தோப்பு ஆகிய ஊர்களிலிருந்து ஒரத்தநாட்டில் உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிகமான மாணவிகள், கல்வி பயின்று வருகிறனர். மாலை 4.20 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் முடிவடைந்து, ஒரத்தநாடு பஸ் நிலையம் வருவதற்குள் தடம் எண். 478 பஸ் புறப்பட்டு சென்று விடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட பஸ்சின் நேரத்தை மாற்றி மாலை 4.30 மணிக்கு ஒரத்தநாடு பஸ் நிலையத்திலிருந்து இயக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஒரத்தநாடு

மேலும் செய்திகள்