உத்தமபாளையம் நகர் பகுதியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்படுகிறது. அதே இடத்தில் ஆ.டி.ஓ. அலுவலகமும் இருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் காணப்படும். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றினால் நெரிசலை தவிர்க்கலாம்.