விபத்து அபாயம்

Update: 2026-01-11 17:42 GMT
எம்.புதூர் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை அருகே வேகத்தடை உள்ளது. ஆனால் இ்ந்த வேகத்தடைகள் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அந்த வேகத்தடையில் சிக்கி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்