திருவண்ணாமலை-சேலம் செல்லும் கனரக வாகனங்கள் கள்ளக்குறிச்சி நகருக்கு வந்துதான் சேலம் செல்லும் நிலை உள்ளது. மேலும் சேலத்தில் இருந்து திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கனர வாகனங்களும் கள்ளக்குறிச்சி நகருக்குள் வந்துதான் செல்கின்றன. இதனால் கள்ளக்குறிச்சி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கனரக வாகனங்கள் கள்ளக்குறிச்சி நகருக்குள் வராமல் செல்லும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.