கம்பம் நகராட்சி தாத்தப்பன்குளம் 10-வது வார்டு 5-வது தெருவில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயுடன் இணைக்கப்பட்டுள்ள வால்வுடன் இணைக்கப்பட்டுள்ள குழாய் சாலை மட்டத்தைவிட சற்று உயரமாக இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் குழாயை பதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.