வேகத்தடையால் விபத்து

Update: 2026-01-04 13:18 GMT

கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் அரசு மகளிர் பள்ளி, தூய பாத்திமா அன்னை தேவாலயம், டான்சி உள்பட பல இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் வருகையையொட்டி பல்வேறு இடங்களில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் தற்போது மீண்டும் பல இடங்களில் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் வாகன ஓட்டிகள் பலருக்கு இரவு நேரங்களில் தெரிவதில்லை. இதனால் கீழே விழுந்து விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடைகள் மீது வர்ணம் பூசவும், ஒளிரும் விளக்குகள் பொருத்தவும் வேண்டும்.

மேலும் செய்திகள்