பவானிசாகர் ஒன்றியம் உத்தண்டியூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்திராநகர், கரட்டுப்புதூர், மாயனூர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் 5 கி.மீ. தூரம் மாநில நெடுஞ்சாலையில் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பள்ளி சென்று வர பஸ் வசதி செய்துகொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.