பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் வேளாண்மை வணிகத்துறை மூலம் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இந்நிலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைக்கு வரும் சாலையின் இருபுறங்களிலும் தரைக்கடை வியாபாரிகள் ஆக்கிரமித்து விடுகின்றனர். மேலும் பொதுமக்களும் தங்களது வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அமாவாசை மற்றும் பண்டிகை நாட்களில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையின் ஓரம் அமைப்பதையும், வாகனங்கள் நிறுத்துவதையும் கடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.