தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கடைவீதி பகுதியில் பகல் நேரத்திலேயே கனரக வாகனங்கள் வருகின்றன. அந்த வாகனங்கள் கடைவீதியில் நின்று சரக்குகளை ஏற்றி இருக்கின்றன. இதன் காரணமாக தினமும் போக்குவரத்துக்கு இடையூறும், நெரிசலும் ஏற்படுகிறது. தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு இந்த வாகனங்கள் தான் பிரதான காரணமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கு அதிகாரிகள் எப்போது தான் நடவடிக்கை எடுப்பார்களோ?