நிழற்குடையை ஆக்கிரமித்த செடிகொடிகள்

Update: 2025-12-28 13:03 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடையின் பின்புறம் செடிக்கொடிகள் மிகுதியாக வளர்ந்து உள்ளது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் நிழற்குடையில் அமர முடியாத நிலையில் உள்ளது. மேலும் செடிகளில் இருந்து பூச்சிகள் வரும் அபாயமும் உள்ளது. இந்த பகுதி மக்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் அனைவரும் இந்த நிழற்குடையை பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடிகளை அகற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்