மதுரை நகர் தெற்கு வாசல் சிக்னல்-தெற்கு மாரட் வீதி வளைவு பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படுகின்றது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?