பர்கூர் நகர பஸ் நிலையத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. பஸ்கள் நிற்கும் இடங்களில் அதிக அளவில் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இருசக்கர வாகனங்கள் உள்ளே வருவதால் பஸ் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டவுன் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். இருசக்கர வாகனங்களை உள்ளே நுழைய அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.