தேனி மாவட்டம் போடியில் இருந்து திண்டுக்கல், மணப்பாறை, விராலிமலை, புதுக்கோட்டை வழியாக அறந்தாங்கிக்கு ஒரு அரசு பஸ் தினமும் சென்று வருகிறது. இந்த பஸ் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் இராஜாளிபட்டியில் நின்று பயணிகளை ஏற்றிச் சென்று வந்தது. ஆனால் தற்போது இந்த பஸ் இராஜாளிபட்டி பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்படுவது இல்லை. இதனால் இராஜாளிபட்டி பொதுமக்கள் அடுத்த பஸ்சுக்காக 35 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி இந்த பஸ் இராஜாளிபட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.