கள்ளக்குறிச்சி- சங்கராபுரம் சாலையில் போலீஸ் நிலையம் எதிரே வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.