ரெயில் வசதி

Update: 2025-12-07 16:14 GMT

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால், நெல்லை- செங்கோட்டை பயணிகள் ரெயில் காலை, மாலையில் மட்டுமே முழுமையாக இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் சேரன்மாதேவி- செங்கோட்டை இடையே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நெல்லை டவுனில் இருந்து செங்கோட்டை வரை ரெயிலை இயக்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஆவன செய்வார்களா?.

மேலும் செய்திகள்