ராசிபுரம் நகருக்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் பெரும்பாலான பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களங பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலைகளில் நடந்து செல்பவர்கள் ஏர்ஹாரன் சத்தத்தை கேட்டு அலறும் நிலை உள்ளது. எனவே போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ள பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.