திருவள்ளூர் மாவட்டம் வெங்கல்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் உலாவரும் இந்த மாடுகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறார்கள். இந்த போக்கை சரிசெய்யவும் உரிமையாளர்களை கண்டறிந்து மாடுகளின் போக்கை முறைபடுத்தவும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.