வாகன ஓட்டிகள் குழப்பம்

Update: 2025-12-07 06:30 GMT

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் - தாம்பரம் பைபாஸ் சாலையை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்துகிறார்கள். இந்த வழித்தடத்தில் அம்பத்தூர் செல்லும் வழிதடத்தை காட்டும் பெயர் பலகையை மறைக்கும் வகையில் ஆவடி மாநகராட்சி போலீசாரால் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை உள்ளது. இதனால் புதியதாக அந்த பாதையை பயன்படுத்த நினைப்பவர்கள் குழப்பம் அடைகிறார்கள். எனவே வாகன ஓட்டிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு அறிவிப்பு பலகையை உடனடியாக அகற்றிட போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்