சென்னை அண்ணாசாலையில் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. அரசு ஆஸ்பத்திரி, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளுக்கு செல்வதற்கு இந்த பொதுபோக்குவரத்தை பயன்படுத்துகிறவர்கள் அதிகம். ஆனால் இதற்கு செல்லும் நடைமேடை சேதமடைந்து காணப்படுகிறது. உடைந்து கிடக்கும் நடைமேடையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைமேடையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.