கடலூர் வண்டிப்பாளையம் அடுத்த மத்திய சிறைச்சாலையிலிருந்து எம்.புதூர் செல்லும் சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் சாலையிலேயே படுத்துக்கிடக்கின்றன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.