சங்கராபுரம் அருகே அம்மாபேட்டை- கச்சிராயப்பாளையம் சாலையில் ஆங்காங்கே அதிகளவில் மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து சாலையில் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.