புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கதிராமங்கலம் ஊராட்சி தீயத்தூர் ஊராட்சி பகுதிகளை இணைக்கும் சாலை சடையமங்கலம் பகுதியில் இருந்து சாத்தியடி இணைப்பு சாலையும், வேலிமங்கலத்தில் இருந்து வரும் சாத்தியடி இணைப்பு சாலையும் ஆவுடையார் கோவில் திருப்புனவாசல் இணைப்பு சாலையும் நான்கு வழி சாலையாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனத்தை அதி வேகமாக இயக்குவதினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் சாலையின் குறுக்கே வேகத்தடைகள் அமைத்து விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.