சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் பகுதியிலிருந்து தாம்பரம் செல்லும் தடம் எண் 66-பி பஸ்சினை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் திடீரென அந்த பஸ் ஆழ்வார் திருநகர் பகுதிக்கு வராமல் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சில கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ்சினை மீண்டும் ஆழ்வார் திருநகர் வரை இயக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.