அரியலூர்-திருச்சி சாலையில் 2 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து கல்வி பயின்று செல்கின்றனர். இந்நிலையில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதினால், மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது, எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகமாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.