திருவிதாங்கோடு அருகே கோவில் வட்டத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்பகுதியில் சாலையோரத்தில் உள்ள மழைநீர் ஓடை சீரமைப்பு பணி நடைபெற்றது. சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு பார்த்தபோது அந்த சாலையின் மட்டத்தை விட வடிகால் ஓடை மிகவும் உயரமாகவும் உள்ளது. இந்த குறுக்குச்சாலை நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சாலையாகும். இதனால் அந்த வழியாக இருச்சக்கர வாகனங்களை தவிர வேறு வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி ஓடையின் மீது போடப்பட்டுள்ள சிலாப்புகளை அகற்றி சாலையின் மட்டத்திற்கு அமைத்து வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்றுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜகோபால், கோவில்வட்டம்.