நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை கிழக்கு பக்கத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக சாலையோரத்தில் கழிவுநீர் ஓடையின் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்து காணப்படும் சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிலாப்பை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செய்யது இம்தியாஸ் ஹசன், வடசேரி.