கோவை ஹோப் காலேஜ் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் காமராஜர் சாலையில் ராமானுஜ நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு மாநகராட்சி சார்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிழற்குடை திடீரென்று எவ்வித காரணமின்றி இரவோடு, இரவாக அப்புறபடுத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதனால் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் திறந்தவெளியில் நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அகற்றப்பட்ட நிழற்குடையை உடனடியாக அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.