கால்வாய்கள் பராமரிக்கப்படுமா?

Update: 2025-11-09 10:00 GMT

கூடலூரில் மழை குறைந்து வெயில் அடித்து வருகிறது. ஆனால் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. பல இடங்களில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்