சென்னையை அடுத்த தாம்பரம், கிருஷ்ணா நகரின் முடிச்சூர் சாலையில் உள்ள நடைபாதையில் மர்ம நபர்கள் சிலர் வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்தியிருக்கிறார்கள். இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் இந்த ஆக்கிரமிப்பால் படும் இன்னல் ஏராளம். எனவே, இந்த சார்ந்த துறை அதிகாரிகள் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.