சிதம்பரம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் மேம்பால பகுதியில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் சில இடங்களில் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அங்கு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். மேலும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடைபெறும் சூழலும் உள்ளது. எனவே மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.