திருச்சியில் இருந்து சென்னை செல்லும் பைபாஸ் சாலையில் காவேரி பாலத்தை அடுத்த கொண்டையம்பேட்டை பகுதியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.