பயணிகள் அவதி

Update: 2025-11-02 12:07 GMT

சேலத்தில் இருந்து மதுரை வழியாக அருப்புக்கோட்டை, சிவகாசி, நாகர்கோவில், ராஜபாளையம், தூத்துக்குடி, கோவில்பட்டி போன்ற தென்மாவட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் மதுரை மற்றும் நெல்லை கோட்ட அரசு பஸ்கள் பெரும்பாலும் நாமக்கல் புதிய பஸ் நிலையம் வருவதில்லை. கரூர், ஆண்டகளூர் கேட் போன்ற இடங்களில் தான் நிற்கும் என கண்டக்டர்கள் கூறுகிறார்கள். இல்லையெனில் நாமக்கல்-கீரம்பூர் சுங்கச்சாவடியில் இறக்கி விடுகிறார்கள். இதனால் நாமக்கல் பகுதி பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகளை முதலைப்பட்டி பஸ் நிலையத்தில் இறக்கி விட்டால் கூட அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லட்சுமி நாராயணன், நாமக்கல்.

மேலும் செய்திகள்