ஆக்கிரமிக்கப்பட்ட பஸ் நிலையம்

Update: 2025-11-02 11:51 GMT

பென்னாகரம்-மேச்சேரி பிரதான சாலையில் பெரும்பாலை பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்தை தனியார் வாகனங்களும், வாடகை வாகனங்களும் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் இந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும், பிரதான சாலை ஓரங்களிலேயே நின்று, பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தை பயணிகள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. மழை, வெயில் காலங்களில் பயணிகள் கடும் அவதிபடுகின்றனர். எனவே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பஸ் நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவுரிசங்கர், சாமத்தாள்.

மேலும் செய்திகள்